அமெரிக்காவின் H-1B விசா திட்டத்தால் இந்தியர்கள் பாதிக்கப்படுகிறார்களா?
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் H-1B விசா பற்றிய விவாதங்கள் தீவிரமடைந்துள்ளன.
உலகெங்கிலும் உள்ள சிறந்த திறமைகளையும் மூளைகளையும் கொண்டு வரும் H-1B விசாவின் முக்கிய பயனாளிகள் இந்தியர்களாவர்.
இந்தியாவில் இருந்து மிகவும் திறமையான வல்லுநர்கள் அதிக எண்ணிக்கையிலான H-1B விசாக்களுடன் வெளியேறுகிறார்கள்.
அமெரிக்காவின் 47வது அதிபராக ஜனவரி 20ம் தேதி அமெரிக்க கேபிடல் முன் பதவியேற்கவுள்ள ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப், H-1B க்கு ஆதரவாக களமிறங்கியுள்ளார்.
இது ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சிகள் இரண்டிலும் உண்மையில் பிளவுகளை உருவாக்கியுள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ட்ரம்ப், நம் நாட்டில் மிகவும் திறமையான நபர்கள் இருக்க வேண்டும் என்று நான் எப்போதும் உணர்ந்திருக்கிறேன். எங்களுக்கு திறமையானவர்கள் தேவை, புத்திசாலிகள் நம் நாட்டிற்கு வர வேண்டும், நிறைய பேர் வர வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஆனால் உண்மையில் “எச்-1பி விசா திட்டத்தின் முக்கிய குறிக்கோள், சிறந்த மற்றும் பிரகாசமானவர்களை’ பணியமர்த்துவது அல்ல, மாறாக நல்ல ஊதியம் பெறும் அமெரிக்க வேலைகளை வெளிநாட்டில் இருந்து குறைந்த ஊதிய ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பதாகும் இங்கு உழைப்பு மலிவானது.
ஆக இந்த திட்டத்தினால் இந்தியர்கள் மலிவான விலையில் தங்கள் உழைப்புகளை வழங்கி வருவதாக விமர்சனங்கள் எழுந்துள்ன.