அடுத்த பாப்பரசர் தெரிவுப் பட்டியலில் பேராயர் ரஞ்சித்
அடுத்த புனித பாப்பரசரைத் தெரிவு செய்யும் பட்டியலில் இலங்கையின் கிறிஸ்தவ கத்தோலிக்க சமூகங்கள் மாத்திரம் அன்றி ஏனைய சமூகங்களினதும் பெரும் அன்புக்கும் மதிப்புக்கும் பாத்திரமான கொழும்பு பேராயர் கார்டினல் மெல்கம் ரஞ்சித் அவர்களின் பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பெயர் சிபாரிசு செய்யப்பட்டுள்ள 12 பேரில் ஒருவராக கார்டினல் ரஞ்சித் அவர்களின் பெயரும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் கூறுகின்றன.
இவ்வாறு உலகெங்கிலும் உள்ள கார்டினல்கள் வத்திகானில் ஒன்று கூடி தாம் விரும்பியவரை பாப்பரசராக தெரிவு செய்வது வழமை.
இவர்களில் 2/3வாக்குகளை பெறுபவர் புனித பாப்பரசராக தெரிவு செய்யப்படுவார்.
இதற்கு முன்னரும் இவரது பெயர் இப்பதவிக்கு சிபாரிசு செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
(Visited 13 times, 1 visits today)





