காஸாவை மீண்டும் கட்டியெழுப்பும் திட்டம் – அரபு தலைவர்கள் இணக்கம்

பாலஸ்தீன அதிகாரசபையின் எதிர்கால நிர்வாகம் காஸா பகுதியை கட்டியெழுப்பும் திட்டத்தை அரபு தலைவர்கள் முன்மொழிந்துள்ளனர்.
காஸாவை முழுமையாக கைப்பற்றி அதனை மீண்டும் கட்டியெழுப்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்த திட்டத்திற்கு மாற்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா காஸாவை “கையகப்படுத்தி” இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பாலஸ்தீனியர்களை வெளியேற்ற வேண்டும் என்ற ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் யோசனைக்கு அரபு தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
கெய்ரோவில் நடந்த ஒரு உச்சிமாநாட்டில் அரபுத் தலைவர்களால் அங்கீகரிக்கப்பட்ட 53 பில்லியன் டொலர் திட்டம், பொதுமக்களை காசாவிலிருந்து வெளியேற்றாமல் காசாவை புனரமைக்கும்திட்டத்தினை அராபிய தலைவர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.
(Visited 21 times, 1 visits today)