காஸாவில் போர்நிறுத்தம் கோரி அரபு நாடுகள் கடும் அழுத்தம்
காஸா பகுதியில் போர் நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என அரபு நாடுகள் கடுமையாக கூறி வருகின்றன.
இந்நிலையில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அந்தோனி பிளின்கன் பல அரபு நாடுகளின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
அதன்படி, லெபனான், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளின் தலைவர்களை சந்தித்து, காஸா பகுதியில் நிலவி வரும் மோதல்கள் குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
காஸா பகுதியில் பாலஸ்தீன மக்கள் உயிரிழப்பதை தடுக்க விரைவில் போர்நிறுத்தம் கொண்டு வர வேண்டும் என்று அந்நாட்டு தலைவர்கள் கடுமையாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஒரேயடியாக அதற்கு அமெரிக்கா சம்மதிக்கவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போர்நிறுத்தம் செய்வதில் அமெரிக்கா தயங்குகிறது.
இந்த நேரத்தில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை எட்டினால் அது ஹமாஸுக்கு சாதகமாக அமையும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் அந்தோனி பிளின்கன் தெரிவித்துள்ளார்.
அவர்கள் மீண்டும் குழுக்களாக ஒன்றிணைந்து மேலும் தாக்குதல்களை மேற்கொள்ளும் அபாயம் காணப்படுவதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும், மோதல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் காஸா பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு சேதம் ஏற்படுவதை தடுக்க இஸ்ரேல் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அமெரிக்க இராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் தற்காலிக போர் நிறுத்தத்தை எட்ட மறுத்துவிட்டார். ஹமாஸ் தீவிரவாதிகளின் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படும் வரை போர் நிறுத்தம் இருக்காது என்கிறார்.