ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி!

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
திடீர் ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்னர், லண்டனுக்கு சென்றிருந்த ரஹ்மான், சமீபத்தில் சென்னைக்கு திரும்பியிருக்கிறார். இந்த நிலையில் அவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டதால் உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் லண்டனில் உள்ள ஒரு இசைக்கல்லூரியின் நிகழ்ச்சியுடன் சேர்ந்து ஒரு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் அவர் பிற மானவர்களின் இசை ஆர்வத்தையும், அவர்களின் திறமைகளையும் பாராட்டி பதிவிட்டிருந்தார்.
அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற விவரம், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால், ஏ.ஆர்.ரஹ்மானின் உடல் நிலை குறித்து தெரிந்து கொள்ள அனைவரும் சமூக வலைதளங்களில் பதற்றத்துடன் சுற்றி கொண்டிருக்கின்றனர்.