ஆப்ரிக்காவில் குழந்தைகள் திருமணத்திற்கு தடை விதிக்கும் சட்டமூலத்திற்கு ஒப்புதல்!
ஆப்ரிக்காவில் குழந்தைகள் திருமணத்திற்கு தடை விதிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டுள்ளது.
அந்நாட்டின் தலைநகரான ஃப்ரீடவுனில் முதல் பெண்மணி பாத்திமா பயோ ஏற்பாடு செய்திருந்த விழாவில் ஜனாதிபதி ஜூலியஸ் மாடா பயோ குழந்தை திருமணத் தடைச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளார்.
இந்நிலையில் இனி 18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைப்பவர்களுக்கு 15 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்படும் என்பதுடன்ன, அபராதமும் விதிக்கப்படும்.
எவ்வாறாயினும் கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் பாரம்பரியத்தை முறியடிப்பது கடினம் என்றும், புதிய சட்டம் பயனுள்ளதாக இருக்க ஒவ்வொரு சமூகத்திற்கும் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
(Visited 5 times, 1 visits today)