நெருங்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் – டெக்சஸ் மாநிலம் மீது அதிக கவனம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில் இரண்டு ஜனாதிபதி வேட்பாளர்களும் டெக்சஸ் மாநிலத்தில் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் 10 நாட்கள் மாத்திரமே உள்ளன. இந்த நிலையில், தேர்தல் முடிவைத் தீர்மானிக்கக்கூடிய முக்கிய மாநிலங்களில் ஒன்றாக டெக்சஸ் கருதப்படுகிறது.
ஹியுஸ்டன் நகரில் நேற்று கமலா ஹாரிஸுடன் (பிரபலப் பாடகி Beyonce பிரசாரத்தில் பங்கேற்றார்.
ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களைத் தொடர்ந்து ஆதரித்துவரும் பாடகி Beyonce பெண்ணுரிமை பற்றிக் கவனம் செலுத்தினார்.
குடியரசுக் கட்சியின் பக்கம் சாயக்கூடிய டெக்சஸ் மாநிலத்தில் டொனல்ட் டிரம்ப் (Donald Trump) எல்லைப் பாதுகாப்புப் பற்றியும் குடியேற்றம் பற்றியும் பேசினார்.
(Visited 15 times, 1 visits today)