செய்தி

புதிய கணக்காய்வாளர் நாயகம் நியமனம்: அரசியலமைப்பு பேரவை ஒப்புதல்

புதிய கணக்காய்வாளர் நாயகமாக new Auditor General திருமதி சமுதிகா ஜயரத்னவை Samudika Jayaratne நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

கணக்காய்வாளர் நாயகத் திணைக்களத்தின் மூத்த துணைக் கணக்காய்வாளராக இவர் பதவி வகித்தார்.

அரசியலமைப்பு பேரவை The Constitutional Council அதன் தலைவர் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (03) கூடியது.

இதன்போதே மேற்படி முடிவு எட்டப்பட்டுள்ளது.

கணக்காய்வாளர் நாயகப் பதவிக்கு ஜனாதிபதியால் இதற்கு முன்னர் பரிந்துரைக்கப்பட்டிருந்த நான்கு பெயர்களை அரசியலமைப்பு பேரவை நிராகரித்திருந்தது.

இந்நிலையிலேயே ஜனாதிபதியால் ஐந்தாவது தடவையாக அனுப்பட்டுள்ள பெயருக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் இவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு பேரவையில் பிரதமர், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் மூன்று சிவில் பிரதிநிதிகள் உட்பட 10 பேர் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!