வட அமெரிக்கா

தற்போதைய FBI இயக்குநருக்குப் பதிலாக காஷ் பட்டேல் நியமனம் ; ட்ரம்ப் அறிவிப்பு

அமெரிக்காவின் எஃபிஐ (FBI) எனப்படும் மத்திய புலனாய்வுப் பிரிவின் தலைவராக கே‌ஷ் பட்டேல் எனும் இந்திய வம்சாவளி நபர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்த அமெரிக்க அதிபராகப் பதவியேற்கவிருக்கும் டொனால்ட் டிரம்ப், தனது விஸ்வாசி எனக் கூறப்படும் பட்டேலை, FBI தலைவர் பொறுப்புக்கு நியமித்துள்ளார் என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வீரம், மரியாதை போன்ற குணாதிசயங்களை மீண்டும் FBI-க்குக் கொண்டுவர பட்டேல், அமெரிக்காவின் புதிய தலைமைச் சட்ட அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள பேம் பொண்டிக்குக்கீழ் பணியாற்றுவார் என்று டிரம்ப், ட்ரூத் சோ‌ஷியல் எனும் சமூக ஊடகத்தளத்தில் குறிப்பிட்டார்.

பட்டேல், முன்னதாக பராக் ஒபாமா அமெரிக்க அதிபராகப் பொறுப்பு வகித்தபோது சிறிது காலம் அந்நட்டின் நீதித்துறையில் பணியாற்றினார். பின்னர் அவர், டிரம்ப் அதிபராக இருந்தபோது 2018ஆம் ஆண்டில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு மன்றத்தின் மூத்த இயக்குநராகப் பொறுப்பு வகித்தார்.

டிரம்ப்பின் முதல் ஆட்சி காலத்தின் கடைசி சில மாதங்களில் பட்டேல், அன்றைய தற்காலிகத் தற்காப்பு அமைச்சர் கிறிஸ்டஃபர் மில்லரின் தலைமை நிர்வாகியாகவும் நியமிக்கப்பட்டார்.

டெக்சாஸ் மாநிலத் தலைமைச் சட்ட அதிகாரி கென் பாக்ஸ்டன் போன்ற சில உயர்மட்ட குடியரசுக் கட்சியினரிடமிருந்து படேல் பொது ஆதரவைப் பெற்றிருந்தாலும், படேலின் நியமனம் செனட் ஜனநாயகக் கட்சியினரிமிருந்தும் சில குடியரசுக் கட்சியினரிடமிருந்தும் பின்னடைவைப் பெற வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது.

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!