Apple நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை – செயற்கை நுண்ணறிவுடன் களமிறங்கும் iPad Pro
Apple நிறுவனம் புதிய ரக iPadகளை அறிமுகம் செய்துள்ள நிலையில் அதில் செயற்கை நுண்ணறிவு சில்லு பொருத்தப்பட்டுள்ளது.
iPad Pro எனும் புதிய iPadஇல் M4 எனும் ஆற்றல்மிக்க செயற்கை நுண்ணறிவு சில்லு பொருத்தப்பட்டுள்ளது.
தற்போது Apple தயாரிக்கும் மடிக்கணினிகளில் பயன்படுத்தப்படும் சில்லைவிட அது சக்திவாய்ந்தது என்று நிறுவனம் கூறியது.
அந்தச் சில்லு செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திக் கூடுதலான பணிகளைச் செய்யக்கூடியது என்றும் நிறுவனம் சொன்னது.
நிறுவனம், அது தயாரிக்கும் சாதனங்களில் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யத் தயார் என்பதற்கான அறிகுறியாக இந்தச் செயல் கருதப்படுகிறது.
iPad Pro, iPad Air இரண்டு ஆண்டுக்குப் பிறகு வெளியிடப்படுகின்றன.
இதுவரை தயாரிக்கப்பட்ட iPadகளில் iPad Pro ஆக ஆற்றல்மிக்கது என்று Apple குறிப்பிட்டுள்ளது.