அதிக வருவாயை ஈட்டியுள்ள Apple நிறுவனம்
Apple நிறுவனம் எதிர்பார்த்ததைவிட அதிக வருவாய் ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
iPhone விற்பனையிலிருந்தும் அதன் சேவைகளிலிருந்தும் இவ்வாண்டின் முதல் 3 மாதங்களில் ஈட்டப்பட்ட அதன் இலாபம் 24 பில்லியன் டொலராகும்.
பொருளாதார மந்தநிலைக்கும் பணவீக்கத்துக்கும் இடையிலும்கூட நிறுவனத்தின் ஒட்டுமொத்த வருவாய் 94.8 பில்லியன் டொலரை எட்டியது.
iPhone விற்பனை 2 சதவீதம் அதிகரித்தது. அதன் மூலம் 51.3 பில்லியன் டொலர் வருவாய் கிடைத்துள்ளது.
உலகில் பில்லியன் கணக்கான iPhone கைத்தொலைபேசிகள் பயன்படுத்தப்படுவதை எண்ணியும் Apple நிறுவனத்தின் வளர்ச்சியை எண்ணியும் பூரிப்பதாக நிறுவனத்தின் தலைமை நிர்வாகி டிம் குக் (Tim Cook) தெரிவித்தார்.
COVID-19 கட்டுப்பாடுகளுக்குப் பிறகு அண்மையில் சீனா அதன் சந்தையை மீண்டும் திறந்துவிட்டது அதற்கு ஒரு காரணம் என்று நிபுணர்கள் கூறினர்.
சீனா, தொடர்ந்து iPhone கைத்தொலைபேசிகளுக்கான முக்கியச் சந்தையாகத் திகழ்கிறது.