இந்தியா செய்தி

கோவிலில் மன்னிப்பு கேளுங்கள் அல்லது 5 கோடி செலுத்துங்கள் : சல்மான் கானுக்கு புதிய மிரட்டல்

இந்தி நடிகர் சல்மான் கானுக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ஏற்கனவே பல முறை கொலை மிரட்டல் விடுத்து இருந்தது.

இந்த கும்பல்தான் அவரை கொல்லும் நோக்கில் அவரது வீட்டில் துப்பாக்கி சூடு நடத்தி இருந்தது.

இதற்கிடையே சல்மான் கானுக்கு மிகவும் நெருக்கமானவரும், மகாராஷ்டிர முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் சுட்டுக் கொல்லப்பட்டார்.

லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல்தான் இதற்கு பொறுப்பேற்றுக்கொண்டது.

அதை தொடர்ந்து சல்மான்கானிடம் ரூ.2 கோடி கேட்டு சமீபத்தில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக பாந்த்ராவை சேர்ந்த ஆசம் முகமது முஸ்தான் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நடிகர் சல்மான்கானுக்கு மீண்டும் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சல்மான்கான் உயிருடன் இருக்க விரும்பினால் அவர் எங்கள் பிஷ்னோய் சமூகத்தினர் கோவிலுக்கு சென்று பொது மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது 5 கோடி கொடுக்க வேண்டும்.

அப்படி செய்யாவிட்டால் அவரை கொன்று விடுவோம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டது. மும்பை போக்குவரத்து போலீசாரின் ஹெல்ப்லைனில் நள்ளிரவில் கொலை மிரட்டல் அழைப்பு வந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மிரட்டல் விடுத்தவன் பாபா சித்திக் கொலையில் தொடர்புடைய பிஷ்னோயின் சகோதரர் என்று கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

(Visited 36 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி