வியட்நாமில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து : 14 பேர் உயிரிழப்பு!

வியட்நாமின் ஹனோய் நகரில் உள்ள சிறிய அடுக்குமாடி கட்டிடத்தில் ஒரே இரவில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீயை அணைக்க ஒரு மணி நேரம் போராடியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ பற்றிய போது எத்தனை பேர் உள்ளே இருந்தனர் என்பது உடனடியாகத் தெரியவில்லை என்பதுடன் 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
தீவிபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
(Visited 22 times, 1 visits today)