பாகிஸ்தானில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து – 27 பேர் பலி

பாகிஸ்தான் நாட்டின் லாகூர் மாகாணம் பாக்தாதி நகரில் 5 அடுக்குமாடிகளை கொண்ட குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பு 40க்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர்.
இந்நிலையில், இந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று அதிகாலை இடிந்து விபத்துக்குள்ளானது. இதில் பலரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிலர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆனாலும், இந்த விபத்தில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் மேலும் சிலர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக அவர்களை மீட்கும்பணி துரிதமாக நடைபெற்று வருகிறது.
(Visited 1 times, 1 visits today)