ஆசியான் பிராந்திய உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள டிரம்பிற்கு அன்வார் அழைப்பு

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம், வரும் அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்புக்குத் தாம் அழைப்பு விடுத்திருப்பதாகக் கூறியுள்ளார்.
அதிகாரபூர்வமாகத் தாம் அழைப்பு அனுப்பியிருப்பதாக வியாழக்கிழமை (ஜூலை 10), அன்வார் சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசியானின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள மலேசியா அக்டோபரில் அந்த மாநாட்டை ஏற்று நடத்தவுள்ளது.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின்போது கிழக்காசிய உச்சநிலை மாநாடும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 2 times, 2 visits today)