அஜித்தைச் சந்தித்த அனிருத்
சர்வதேச கார் பந்தயங்களில் தீவிர கவனம் செலுத்தி வரும் நடிகர் அஜித் குமார், தற்போது அபுதாபியில் நடைபெறும் 24H சீரிஸ் (24H Series Middle East Trophy) போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
அங்கு அவரை இசையமைப்பாளர் அனிருத் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட, அவை இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள அஜித்தின் 64-வது திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்தச் சந்திப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





