இலங்கை

இலங்கை ஜனாதிபதியாக பதவியேற்றப்பின் முதல் வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்லும் அனுர!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கரின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் ஜனாதிபதி அனுரகுமாரா திஸாநாயக்கவை சந்திக்கவுள்ளார். இந்நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

இந்தியாவின் அண்டை நாடு முதல் கொள்கை மற்றும் SAGAR கண்ணோட்டத்திற்கு ஏற்ப, பரஸ்பர நன்மைக்காக நீண்டகால கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த இரு நாடுகளின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை ஜெய்சங்கரின் வருகை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, ​​இலங்கையில் இந்திய நிதியுதவி திட்டங்கள் மற்றும் அதன் முன்னோக்கி செல்லும் பாதை குறித்தும் ஜெய்சங்கர் விவாதிப்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படாத போதிலும், ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம் நவம்பர் 14 ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பின்னரே திட்டமிடப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

(Visited 28 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்
error: Content is protected !!