புலம்பெயர் தமிழ் குழுக்களை திருப்திபடுத்தும் அநுர அரசாங்கம் – உதய கம்மன்பில குற்றச்சாட்டு
																																		புலம்பெயர் தமிழ் பிரிவினைவாதக் குழுக்களை திருப்திபடுத்துவதற்காக புத்தாண்டுக்கு முன்னதாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கூடும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
“ தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வருவதற்கு கனேடிய தமிழ் காங்கிரஸ், உலக தமிழர் பேரவை உள்ளிட்ட தமிழ் பிரிவினைவாதக் குழுக்கள் ஆதரவு வழங்கின.
மாகாணசபைத் தேர்தலை நடத்தி, அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதே இத்தரப்புகளின் கோரிக்கையாக இருந்தது.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.” எனவும் கம்மன்பில குறிப்பிட்டார்.
எனவே, மாகாணசபைத் தேர்தலை இந்த அரசாங்கம் நிச்சயம் நடத்தும். புத்தாண்டுக்கு முன்னர் இத்தேர்தல் நடத்தப்படலாம்.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
        



                        
                            
