ஐரோப்பா

பிரித்தானியாவில் வெடித்த இனச் சார்பு போராட்டம் : முப்பத்திற்கும் மேற்பட்ட பொலிஸார் காயம்!

பிரித்தானியாவின் சவுத்போர்ட்  பகுதியில் மூன்று சிறுமிகள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்தவகையில் சவுத்போர்ட் மசூதிக்கு வெளியே மக்களுக்கும் – பொலிஸ் அதிகாரிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.

இதில் பல பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் நான் இறக்கும் வரை ஆங்கிலேயர் என்ற வார்த்தைகளை உச்சரித்துள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தீவிர வலதுசாரி ஆங்கிலேய பாதுகாப்பு லீக்கின் ஒரு பகுதியினர் என தாங்கள் நம்புவதாக பொலிசார் கூறியுள்ளனர்.

இந்த முறுகல் சம்பவத்தில் 39 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 27 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரதம மந்திரி சர் கெய்ர் ஸ்டார்மர், கோளாறுக்கு காரணமானவர்கள் “சட்டத்தின் முழு வலிமையையும் உணருவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

(Visited 23 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்