பிரான்ஸில் மற்றுமொரு பாதிப்பு – கடும் நெருக்கடியில் சுகாதார பிரிவு

பிரான்ஸில் நுளம்புகளினால் ஏற்படும் டெங்கு மற்றும் chikungunya நோய்த்தாக்கம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸின் மத்திய-கிழக்கு மாவட்டமான Rhône இல் இந்த பாதிப்பு அதிகரித்துள்ளது.
கடந்த மே மாதம் முதல் இதுவரை அங்கு 13 பேருக்கு இந்த நோய்த்தாக்கம் ஏற்பட்டிருந்ததாக Auvergne-Rhône-Alpes இற்கான பிராந்திய சுகாதார பிரிவு அறிவித்துள்ளது.
அதேவேளை அங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் டெங்கு மற்றும் chikungunya நோய்த்தாக்கத்துக்கு உள்ளானவர்களிடம் இருந்து மற்றவர்களை பாதுகாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 7 times, 1 visits today)