ரஷ்யாவிற்கு மற்றுமோர் சுனாமி எச்சரிக்கை விடுப்பு!

ரஷ்யாவில் இன்று (03.08) காலை ஏற்பட்ட வலுமையான நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர்.
“பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் விளைவாக, 19 சென்டிமீட்டருக்கு மேல் உயரமில்லாத சுனாமி அலை அலூஷியன் நகராட்சி மாவட்டத்தை அடையக்கூடும் எனவும் 15 சென்டிமீட்டருக்கு மேல் உயரமில்லாத உஸ்ட்-கம்சாட்ஸ்கி நகராட்சி மாவட்டத்தை அடையக்கூடும்ஷ எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் 3 சென்டிமீட்டருக்கு மேல் உயரமில்லாத பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகர்ப்புற மாவட்டத்தை அடையக்கூடும்” என்று கம்சட்கா சுனாமி எச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு மையத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)