வங்கதேசத்தில் மற்றுமொரு மாணவரும் சுட்டுப் படுகொலை!
வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்கு வழியமைத்த மாணவர் தலைவர் உஸ்மான் ஹாடி கொல்லப்பட்டத்தை தொடர்ந்து மற்றுமொரு மாணவ தலைவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) மூத்த தலைவர் மீது அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இன்று காலை 11:45 மணியளவில் நகரின் சோனாடங்கா (Sonadanga)பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நடந்ததாக வங்கதேச நாளிதழ் புரோதோம் அலோ தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





