சர்வதேச பதற்றங்களுக்கு மத்தியில் ஆங்கிலக் கால்வாயில் பயணிக்கும் மற்றுமொரு ரஷ்ய கப்பல்!
ரஷ்ய கொடியுடன் பயணித்த கப்பல் ஒன்றை அமெரிக்கா கைப்பற்றியுள்ள நிலையில் தற்போது மற்றுமொரு ரஷ்ய கப்பல் ஆங்கிலக் கால்வாயில் பயணித்து வருவதாக கூறப்படுகிறது.
‘டாவியன்’ (Tavian) என அழைக்கப்படும் குறித்த கப்பலுக்கு கடந்த 2024 ஆம் ஆண்டு அமெரிக்கா தடை விதித்திருந்தது.
இந்நிலையில் குறித்த கப்பலையும் அமெரிக்கா கைப்பற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
முன்னதாக சர்வதேச கடற்பகுதியில் வெனிசுலாவில் இருந்து வெளியேறும் கப்பல்கள் சிறைப்பிடிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதற்கமையவே மரினெரா (Marinera) கப்பல் கைப்பற்றப்பட்டது.
குறித்த கப்பலை கைப்பற்ற பிரித்தானியா அமெரிக்காவிற்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





