லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) தலைத்தூக்கியுள்ள மற்றுமொரு பிரச்சினை!
லூவ்ரே அருங்காட்சியகத்தில் (Louvre Museum) சமீபத்தில் இடம்பெற்ற கொள்ளை மற்றும், நீர் கசிவு உள்ளிட்ட பிரச்சினைகளை தொடர்ந்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபட நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை இடம்பெற்ற வாக்கெடுப்பில் சுமார் 400 தொழிலாளர்கள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டதாக CFDT தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
உலகில் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகம் திட்டமிட்டபடி திறக்கப்படவில்லை என்றும் பார்வையாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும் லூவ்ரேவின் (Louvre Museum) வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் தொழில் சங்கங்களுக்கும், கலாச்சார அமைச்சர் ரச்சிடா டாட்டி (Rachida Dati) உள்ளிட்ட அரசு அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தை முன்னெடுப்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





