அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து
அமெரிக்காவில் மற்றுமொரு விமான விபத்து இடம்பெற்றுள்ளது.
பென்சில்வேனியாவில் 6 பேருடன் பயணித்த தனியார் விமானமொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
மோசமான வானிலை காரணமாகக் குறித்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இவ்விபத்தினால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து எவ்வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை.
இந்த விமானத்தில் இரண்டு நோயாளர்கள், இரண்டு மருத்துவர்கள் மற்றும் இரண்டு ஊழியர்கள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 2 times, 2 visits today)