இலங்கை நாடாளுமன்ற இணையத்தளத்தில் மற்றுமொரு அமைச்சரின் கலாநிதி பட்டம் நீக்கம்

நாடாளுமன்ற இணையத்தளத்தில் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் இருந்த கலாநிதி பட்டம் நீக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற இணையத்தளத்தில் ஹர்ஷன நாணயக்காரவின் பெயருக்கு முன்னால் கலாநிதி பட்டம் குறிப்பிடப்பட்டிருந்ததாக சபாநாயகர் அலுவலகம் விடுத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஹர்ஷன நாணயக்கார தனிப்பட்ட முறையில் கௌரவ கலாநிதி பட்டம் ஒன்றை பெற்றதாக குறிப்பிடும் கடிதத்தை கையளிக்கவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, உறுப்பினர்களின் விபரங்கள் இணையத்தளத்தில் சரியாக பதியப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு இணையத்தளத்திற்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு நாடாளுமன்றத்தின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதனால், இணையதளத்தில் தவறாகப் பதிவு செய்யப்பட்ட சில தகவல்கள் திருத்தப்பட்டதாகத் தெரிகிறது.