உலகம் செய்தி

வங்கதேசத்தில் மேலும் ஒரு இந்து நபர் மீது கொடூர தாக்குதல்

வங்கதேசத்தில்(Bangladesh) மற்றொரு இந்து நபர் ஒரு வன்முறைக் குழுவால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் வங்கதேசத்தின் ஷரியத்பூர்(Shariatpur) மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது, மேலும் இது வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதல்களில் சமீபத்தியது.

50 வயதான கோகோன் தாஸ்(Khokon Das) என்று அடையாளம் காணப்பட்ட நபர் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் ஒரு கத்தியால் குத்தப்பட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் அருகிலுள்ள குளத்தில் குதித்ததால் உயிர் தப்பியுள்ளார்.

இந்நிலையில், “இதை யார் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. எங்களுக்கு நீதி தேவை. என் கணவர் ஒரு எளிய மனிதர், அவர் யாருக்கும் தீங்கு செய்யவில்லை. அவர் யாரையும் காயப்படுத்தவில்லை” என்று கோகோன் தாஸின் மனைவி குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களில் வங்கதேசத்தில் ஒரு இந்து மீது நடத்தப்பட்ட நான்காவது தாக்குதல் இதுவாகும்.

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!