ஹங்வெல்ல பிரதேசத்தில் மற்றுமொரு துப்பாக்கி சூடு – ஒருவர் பலி
ஹங்வெல்ல, நிரிபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னா ரோஷனின் சகோதரரும் அவரது உதவியாளர் ஒருவரும் பயணித்த கெப் ரக வாகனம் மீது இவ்வாறு துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் கெப் ரக வாகனத்தில் பயணம் செய்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நிரிபொல பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய மன்னா ரொஷானின் சகோதரரே உயிரிழந்துள்ளார்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





