ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம் – அச்சத்தில் மக்கள்
டோக்கியோவின் வடகிழக்கே ஜப்பானின் இபராக்கி பகுதியில் ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை உள்ளூர் நேரப்படி 0:50 மணிக்கு இந்த அதிர்வு உணரப்பட்டதனையடுத்து மகக்ள் அச்சதமடைந்துள்ளனர்.
நிலநடுக்கத்தின் மையம் 36.7 வடக்கு அட்சரேகை மற்றும் 140.6 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.
ஜப்பான் சமீபத்தில் “மெகாஷாக்” ஏற்படக்கூடிய எச்சரிக்கையை வெளியிட்டது, ஆனால் ஒரு வாரம் கழித்து எச்சரிக்கையை நீக்கியது.
ஆகஸ்ட் 8 ஆம் தேதி நாட்டின் தெற்குப் பகுதியில் ஏற்பட்ட 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.





