இலங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமோர் நெருக்கடி!
மருந்து மாஃபியாவில் ஈடுபட்டுள்ள பல நிறுவனங்களால் சுகாதார அமைச்சகம் கட்டுப்படுத்தப்படுகிறது என சுகாதார நிபுணர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க சுகாதார அமைச்சரை இந்த நிறுவனங்கள் வற்புறுத்துவதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிறுவனங்களின் தாளத்துக்கு அமைச்சரும் ஆடுவாரா என்று தொழிற்சங்கங்கள் காத்துக் கொண்டிருக்கின்றன என்றார்.
சுகாதாரச் செலவு நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாகவும், ஆனால் மின்சார கட்டணம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கான கட்டணம் செலுத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் 130 வகையான மருந்துகளை உள்நாட்டில் கொள்வனவு செய்வதற்கு கடந்த வாரம் அனுமதி வழங்கப்பட்டதாகவும் இதன் மூலம் மருந்துகளின் விலை நான்கு மடங்கு அதிகரிக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.





