பிரான்ஸ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள மற்றுமொரு நெருக்கடி
பிரான்ஸில் மெற்றோ பயணச்சிட்டைகளின் விலை இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறும் காலம் முழுவதும் இந்த அதிகரிப்பை மக்கள் எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிடப்படுகின்றது.
2024 ஆம் ஆண்டு ஜூலை 20 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் மற்றும் பாரா-ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று முடியும் வரை மெற்றோ கட்டணங்கள் இரண்டு மடங்காக அதிகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணத்துக்கான மெற்றோ பயணச்சிட்டை 2.10 யூரோக்களுக்கு பதிலாக 4 யூரோக்களுக்கும், நாள் ஒன்றுக்கான பயணக்கட்டணம் 8 யூரோக்களுக்கு பதிலாக 16 யூரோக்களும், வாராந்த பயணக்கட்டணம் 35 யூரோக்களுக்கு பதிலாக 70 யூரோக்களுக்கும் விற்பனையாகும்.
அதேவேளை, RER கட்டணங்களும் சராசரியாக 6 யூரோக்களால் அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 8 times, 1 visits today)