சிங்கப்பூர் மக்களுக்கு காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி
சிங்கப்பூரில் தண்ணீர்க் கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அடுத்த ஏப்ரல் மாதம் முதல் இந்த அதிகரிப்பு ஏற்படவுள்ளதாக PUB எனப்படும் தேசியத் தண்ணீர் அமைப்பு அறிவித்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள், ஒரு கன மீட்டருக்குத் தண்ணீர்க் கட்டணம் 50 காசு அதிகரிக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
தற்போதுள்ள கட்டணத்துடன் ஒப்பிடுகையில் அது, மொத்தம் 18 விழுக்காடு உயரவிருக்கிறது.
மாதத்துக்கு 40 கன மீட்டர் வரை தண்ணீரைப் பயன்படுத்துவோர், ஒரு கன மீட்டருக்குக் கூடுதலாக 50 காசு செலுத்தவேண்டும்
விலையேற்றம் இரு கட்டங்களாக அறிமுகமாகும். 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 20 காசு, 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் 30 காசும் அதிகரிக்கப்படவுள்ளது.
40 கன மீட்டருக்கு மேல் தண்ணீரைப் பயன்படுத்துவோர், அதற்கு மேற்பட்ட ஒவ்வொரு கன மீட்டருக்கும் 70 காசு கூடுதலாகச் செலுத்தவேண்டும்
அதிகம் செலவழிப்போருக்கான விலையேற்றமும் இரு கட்டங்களாக அறிமுகமாகும் என குறிப்பிடப்படுகின்றது.