சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்கள் காத்திருக்கும் மற்றுமொரு நெருக்கடி
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் படுக்கைகளுக்கான சராசரி மாத வாடகை அதிகரித்துள்ளது.
அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
2021 ஆம் ஆண்டு ஒரு ஊழியருக்கு 280 சிங்கப்பூர் டொலராக இருந்த வாடகை, தற்போது (2023ஆம் ஆண்டு) ஒரு ஊழியருக்கு 420 சிங்கப்பூர் டொலராக உயர்ந்துள்ளது.
2023 மே மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் (PCM) சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் work permit அனுமதியுடன் வேலைபார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 112,000 புதிய வெளிநாட்டு ஊழியர்கள் மேற்கண்ட துறைகளில் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதன் காரணமாக விடுதி படுக்கைகளில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்க முடியாது என்று மனித வள அமைச்சு எச்சரிக்கை செய்துள்ளது.
முதலாளிகள், ஊழியர்களுக்கான சொந்தமான குடியிருப்புகளை கட்டுவது குறித்து பரிசீலிக்கவும் அது வலியுறுத்தியது.
உற்பத்தித்திறனை அதிகரித்து கொள்ளவும், வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் போக்கை குறைக்குமாறும் முதலாளிகளுக்கு முன்னர் அமைச்சகம் வலியுறுத்தியது.