மீண்டும் தீவிரமடையும் கொரோனா! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முழுமையாக நீங்கவில்லை என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் தெரிவித்துள்ளார்.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற 76வது உலக சுகாதார சபையில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தற்போதைக்கு பாதிப்புகள் அதிக அளவு இல்லாததால் கொரோனா வைரஸ் அவசரநிலையில் இருந்து மட்டுமே நீக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தொற்று இனி வரும் காலங்களில் தீங்கு விளைவிக்கும் விகாரங்களாக மாறி உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக மேலும் ஒரு கொரோனா அலை உருவாகலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்நிலையில், XXB வகை வைரஸ் சீனாவில் பாதிப்பை ஏற்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.





