டயானா மீது மற்றொரு வழக்கு
 
																																		நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெலிகம நகரசபையின் முன்னாள் தலைவர் ரெஹான் ஜெயவிக்ரமவினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இராஜாங்க அமைச்சராக இருந்த டயானா கமகே இந்த நாட்டின் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்க தகுதியற்றவர் என கடந்த 8ஆம் திகதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்ததாக மனுதாரர் கோரியுள்ளார்.
அதனையடுத்து, கடந்த 9ஆம் திகதி தாம் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு தொடர்பில் தெரிவித்த கருத்துக்கள் உச்ச நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாகக் குற்றம் சுமத்தி இந்த மனுவை சமர்ப்பித்துள்ளார்.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
