இலங்கை செய்தி

இலங்கையில் அரச அலுவலகங்களுக்குத் தொடரும் வெடிகுண்டு மிரட்டல்கள்

இலங்கையில் அரச அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் ஊடாக வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்படும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்றன.

இன்று காலை பதுளை மாவட்டத் தொழில் காரியாலயத்திற்கு மின்னஞ்சல் மூலம் விடுக்கப்பட்ட மிரட்டலால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

உதவித் தொழில் ஆணையாளர் வழங்கிய தகவலின்படி, பொலிஸார் மற்றும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு அலுவலக வளாகம் முழுவதும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

ஏற்கனவே கடந்த மாதம் கண்டி மாவட்டச் செயலகம் மற்றும் நாவலபிட்டி பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கும் இதே போன்ற மிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சோதனைகளின் முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கண்டெடுக்கப்படாத நிலையில், இவை பொதுமக்களையும் ஊழியர்களையும் அச்சுறுத்தும் நோக்கில் அனுப்பப்பட்ட போலி மின்னஞ்சல்கள் எனத் தெரியவந்துள்ளது.

இவ்வாறான திட்டமிட்ட போலி மிரட்டல்களின் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டறிய விசேட அதிரடிப்படையினரும் பொலிஸாரும் விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

Puvan

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!