சிட்னியில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்
இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் சிட்னி நகரில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிட்னி நகரில் உள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அக்கோவிலில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் இத்தாக்குதலை நடத்தியது காலிஸ்தான் ஆதரவாளர்களா என பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.





