செய்தி

இலங்கையில் பேக்கரி உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாதென அறிவிப்பு

இலங்கை சந்தையில் முட்டையின் விலை குறைவடைந்துள்ள போதிலும் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த காலங்களில் சந்தையில் முட்டை ஒன்று 60 முதல் 70 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும் தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இருந்த போதிலும் இதுவரையில் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைவடையவில்லை என நுகர்வோர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவை அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தனவை தொடர்பு கொண்டு வினவியது.

இதற்கு பதிலளித்த அவர், முட்டையின் விலை குறைவடைந்ததன் ஊடாக மாத்திரம் வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என தெரிவித்தார்.

அத்துடன் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் கோதுமை மா மற்றும் வெண்ணெய் என்பவற்றின் விலையும் குறைவடைய வேண்டும் எனவும் அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன குறிப்பிட்டார்.

(Visited 41 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி