சுவிஸ் நாட்டவர்களுக்கு மின்கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சுவிட்சர்லாந்தில், அடுத்த ஆண்டில் மின்கட்டணம், 10 சதவிகிதம் வரை குறைய இருப்பதாக பெடரல் மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
சராசரியாக, வீடொன்றிற்கு 140 சுவிஸ் ஃப்ராங்குகள் வரை மின்கட்டணம் குறைய உள்ளது.
சர்வதேச சந்தைகளில் மின்கட்டணம் நிலைத்தன்மை பெற்றுள்ளதும், குளிர்கால மின்சேமிப்பு கட்டணம் குறைந்துள்ளதுமே, சுவிட்சர்லாந்தில் மின்கட்டணம் குறையக்காரணம் என பெடரல் மின்சார ஆணையம் தெரிவித்துள்ளது.
என்றாலும், நாடு முழுவதும் ஒரே மாதிரியான மின்கட்டண குறைவு இருக்காது. ஒவ்வொரு மாகாணத்திலும், எந்த வகையில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது என்பதின் அடிப்படையிலேயே மின்கட்டண குறைவு இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
(Visited 36 times, 1 visits today)