பயங்கரவாதத்தின் பிடியில் சிக்கிய இலங்கையர்கள் குறித்து வெளிவிவகார அமைச்சின் அறிவிப்பு
இலங்கையர்களை மீட்பதற்கு மியான்மர் தூதரகத்தின் ஆதரவைப் பெறுவதற்கு தீவிரமாக செயற்பட்டு வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டிலிருந்து இந்த நிலைமை ஒரு பிரச்சினையாக இருப்பதாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியன்மார் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு 32 இலங்கையர்கள் அவ்வப்போது மீட்கப்பட்டதாகவும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, மியன்மாரின் சைபர் குற்றப் பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்களை மீட்பது இலகுவான விடயமல்ல என மியன்மாருக்கான இலங்கைத் தூதுவர் ஜனக பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர், சமீபத்திய தகவல்களின்படி, கிட்டத்தட்ட 56 இலங்கையர்கள் தற்போது அந்த பயங்கரவாதத்தின் பிடியில் உள்ளனர்.
சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று அதன் எல்லை வழியாக மியான்மருக்குள் பிரவேசித்த 25க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அந்நாட்டு பயங்கரவாத அமைப்பினரிடம் சிக்கியுள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவர்கள் மியான்மரின் சைபர் கிரைம் மண்டலமான மியாவாடியில் உள்ள பயங்கரவாத முகாமில் வலுக்கட்டாயமாக தடுத்து வைக்கப்பட்டு சைபர் அடிமைகளாக பணியமர்த்தப்பட்டது தெரியவந்தது.
மியான்மருக்கு அண்மித்த மாநிலமான லாவோஸுக்கு தாய்லாந்தில் வேலை வழங்குவதாகக் கூறி இலங்கையர்கள் ஆள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.