ஆஸ்திரேலியா செய்தி

ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகள் அறிவிப்பு!

ரஸ்யாவிற்கு எதிராக புதிய தடைகளை விதிப்பதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.

ஜி7 உச்சிமாநாட்டிற்கு முன்னதாக அவுஸ்திரேலிய பிரதமர் அன்டனி அல்பெனிஸ் தடைகுறித்து அறிவித்துள்ளார்.

அணுசக்தி ஆராய்ச்சி உட்கட்டமைப்பு அபிவிருத்தி ஆயுத உற்பத்தி போன்றவற்றில் ஈடுபட்டுள்ள ரஸ்யாவின் தேசிய அணுசக்தி கூட்டுத்தாபனத்தின் துணை நிறுவனங்களை இலக்குவைத்தே அவுஸ்திரேலியா புதிய தடைகளை அறிவித்துள்ளது.

ரஸ்யாவின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான ரொஸ்நெவ்ட் உட்பட வேறு பல நிறுவனங்களையும் அவுஸ்திரேலியா இலக்குவைத்துள்ளது.

ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள சர்வதேச தாக்கத்திற்கு தீர்வை காண்பதற்காக ஜி7 நாடுகளும் சர்வதேச சமூகமும் மேற்கொள்ளும் முயற்சிகளிற்கு அவுஸ்திரேலியா ஆதரவளிக்கும் எனவும் அன்டனி அல்பெனிஸ் தெரிவித்துள்ளார்.

(Visited 14 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி