இலங்கையில் இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிப்பு!
ஆயுதப்படைகளின் விடுப்பு இன்றி கடமைக்கு சமூகமளிக்காத இராணுவ வீரர்களுக்கு பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 20ஆம் திகதி முதல் மே மாதம் 20ஆம் திகதி வரை இந்த பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த பொது மன்னிப்புக் காலத்தில், இராணுவத் தலைமையகத்திற்கு வந்து அறிக்கையளிக்கும் இராணுவத்தினருக்கு தொடர்ந்து சேவையில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பம் வழங்கப்படுவதுடன், ஒருவர் இராணுவத்திற்கு ஏதேனும் பணம் செலுத்த வேண்டியிருந்தால், பணம் வசூலிக்கப்படும்.
ஏப்ரல் 2 ஆம் திகதிக்கு முன்னர் விடுமுறையின்றி வருகை தருபவர்களுக்கு மாத்திரமே இந்த பொதுமன்னிப்பு பொருந்தும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கு மேலதிகமாக, தற்போது வெளிநாட்டில் உள்ள முப்படையினரும் விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காதவர்கள், பொது மன்னிப்புக் காலத்தில் பல நிபந்தனைகளின் கீழ் சட்டரீதியாக சேவையில் இருந்து வெளியேறும் சந்தர்ப்பம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.