இலங்கையில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு ஜனாதிபதி வெளியிட்ட அறிவிப்பு

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு தலா 20 கிலோ வீதம் அரிசி, நிவாரணமாக வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
எதிர்வரும் பண்டிகை காலத்தில் இந்த அரிசி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு அஸ்வெசும ஊடாக 24 லட்சம் பேருக்கு நன்மைகள் அளிக்க எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் கீழ் மட்டத்தில் வாழும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும் எனவும் நமது நாட்டின் வரலாற்றில் இவ்வளவு பெரிய தொகை நிதி மானியம் வழங்கப்படவில்லை எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
(Visited 21 times, 1 visits today)