தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவித்தல்
நிறுவனங்களில் ஏதேனும் நியமனம் மற்றும் இடமாற்றம் செய்வதற்கு முன்னர் அறிவிக்குமாறு அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தேர்தல் ஆணையம் மீண்டும் அறிவித்துள்ளது.
தேர்தல் காலத்தில் குறிப்பிட்ட சில நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து ஆணைக்குழு இந்த அறிவித்தலை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு நிறுவனத்துக்கு தலைவர் அல்லது பணிப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியமென்றால், எந்தத் தடையும் இல்லை. ஆனால் தேர்தல் ஆணையகத்துக்கு முன்கூட்டியே அறிவித்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
பொதுவாக தேர்தலை பாதிக்கும் நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தவிர்ந்த ஏனைய நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களுக்கு ஆணைக்குழு அனுமதியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





