இலங்கை

இலங்கை நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்கள், சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் தங்களது வருமானச் செலவு அறிக்கையை வரும் 6ஆம் தேதி சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அன்றிரவு 12.00 மணிக்கு முன்னதாக அறிக்கைகளை தனித்தனியாக தயாரித்து வேட்பாளர்கள் போட்டியிட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் தமது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை பொதுத் தேர்தல் செயலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், அனைத்து மாவட்டங்களிலும் சாதாரண வேலை நாட்களில் மாலை 6.00 மணி வரையும், 6-ந்தேதி நள்ளிரவு 12.00 மணி வரையும், வேட்பாளர்களும், வேட்பாளர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் செயலாளர்களும் தேர்தல் வருமானத்தை ஒப்படைக்கும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும் தேர்தல் வருமான செலவின அறிக்கைகளை ஏற்கும் சிறப்புப் பிரிவுகள் செயல்படும். சுயேச்சைக் குழுக்களின் தலைவர்கள் மற்றும் தேசியப் பட்டியல் வேட்பாளர்களுக்கான செலவின அறிக்கைகள் இடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ உரிய அறிக்கைகளை ஒப்படைக்காமல் இருப்பது தேர்தல் நடைமுறைகள் ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் குற்றமாகும் என்றும், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

(Visited 10 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்