வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு இழப்பீடு வழங்குவது குறித்து வெளியான அறிவிப்பு!
வாகன விபத்தில் பாதிக்கப்பட்ட மூன்றாம் தரப்பினருக்கு சட்ட நடவடிக்கை இன்றி நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் மார்ச் முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திரு.லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இதன்படி விபத்து நடந்த ஓராண்டுக்குள் சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்திடம் விண்ணப்பித்து அதிகபட்ச இழப்பீடு தொகையாக 5 இலட்சம் ரூபாயை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண இதனைக் குறிப்பிட்டார்.
இதேவேளை, இலங்கையில் சாரதி அனுமதிப்பத்திரம் தேவைப்படும் வெளிநாட்டவர்கள் ஏப்ரல் 15ஆம் திகதி முதல் விமான நிலையத்தில் விண்ணப்பித்து விமான நிலையத்திலிருந்து வெளியே வந்ததும் சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.