இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பில் வெளியான அறிவிப்பு

பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை 1,700 ரூபாவாக அதிகரிக்கும் தீர்மானம் வேதன நிர்ணய சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொழிலாளர் திணைக்களம் மற்றும் சம்பள சபைக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இதன்படி, பெருந்தோட்ட தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படை வேதனமாக 1,350 ரூபாவும், வருகைக்கான ஊக்குவிப்பு கொடுப்பனவாக 350 ரூபாவும் வழங்குவதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
(Visited 25 times, 1 visits today)