விண்ட்சர் ( Windsor) வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள ஆண்ட்ரூ (Andrew)!
 
																																		பிரிட்டனின் மன்னர் சார்லஸ் (Charles), தனது தம்பி ஆண்ட்ரூவின் (Andrew) இளவரசர் பட்டத்தை பறித்து, தனது விண்ட்சர் (Windsor)வீட்டிலிருந்து வெளியேற்றியுள்ளார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று தெரிவித்துள்ளது.
சார்லஸின் தம்பியும், மறைந்த ராணி எலிசபெத்தின் (Charles) இரண்டாவது மகனுமான 65 வயதான ஆண்ட்ரூ (Andrew) , சமீபத்திய ஆண்டுகளில் தனது நடத்தை மற்றும் மறைந்த பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடனான (Epstein) தொடர்புகள் காரணமாக பெருகிய அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் அவர் யார்க் டியூக் ( Duke of York) என்ற பட்டத்தைப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
சார்லஸ் இப்போது ஆண்ட்ரூவுக்கு (Andrew) எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார், இதனால் அவர் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன் விண்ட்சர் (Andrew Mountbatten Windsor) என்று அறியப்படுகிறார்.
லண்டனுக்கு மேற்கே உள்ள விண்ட்சர் எஸ்டேட்டில் (Windsor Estate) உள்ள தனது ராயல் லாட்ஜ் மாளிகையின் (Royal Lodge)குத்தகையை ஒப்படைக்க ஆண்ட்ரூவுக்கு முறையான அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கிழக்கு இங்கிலாந்தில் உள்ள சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் (Sandringham estate)உள்ள மாற்று தனியார் தங்குமிடத்திற்கு அவர் செல்வார் என்றும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிக்கை தெரிவித்துள்ளது.
புற்றுநோய்க்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வரும் மன்னரின் இந்த முடிவு, நவீன பிரிட்டிஷ் வரலாற்றில் அரச குடும்ப உறுப்பினருக்கு எதிரான மிகவும் வியத்தகு நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
 
        



 
                         
                            
