இந்தியா செய்தி

நடிகர் அல்லு அர்ஜுனுக்கு மருத்துவமனை செல்ல தடை விதித்த ஆந்திர பொலிஸ்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியை பார்க்க சென்ற சந்தியா என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகன் படுகாயம் அடைந்தார்.

அந்த சிறுவன் செகந்திராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான். இந்த விவகாரத்தில் தியேட்டருக்கு வந்து கூட்ட நெரிசல் ஏற்படுத்தி பெண் பலியாக காரணமான அல்லு அர்ஜுன் கைதாகி, ஜாமினில் வந்துள்ளார். இதுதொடர்பான வழக்கு நடந்து வருகிறது.

இந்த நிலையில் அல்லு அர்ஜுன் அந்த மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வரும் சிறுவனை பார்க்க திட்டமிட்டுள்ளார்.

ஆனால் இது குறித்த செய்திகள் வெளியானதை அடுத்து ஆந்திராவில் உள்ள ராம் கோபால்பேட்டை போலீசார், அல்லு அர்ஜுனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்கள்.

அதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவனை நீங்கள் பார்க்க செல்லக்கூடாது. எங்களது தடையை மீறி சென்று மீண்டும் ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்களாம்.

அதன் காரணமாகவே சிறுவனை பார்க்க திட்டமிட்டு இருந்த அல்லு அர்ஜுன் அந்த முடிவை மாற்றியுள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

KP

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி