மேலும் இந்திய அணியின் பயிற்சியாளராக தொடரும் ராகுல் ட்ராவிட்
இந்திய அணியின் பயிற்சியாளராக 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டார்.
2 ஆண்டுகளுக்கு அவரை பி.சி.சி.ஐ ஒப்பந்தம் செய்தது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை போட்டியோடு ராகுல் டிராவிட்டின் பயிற்சியாளர் பதவி காலம் முடிவடைந்தது.
இதனையடுத்து அவரது பதவி காலத்தை நீட்டிக்க பிசிசிஐ விருப்பம் தெரிவித்திருந்தது. ராகுல் டிராவிட்டில் முடிவுக்காக பிசிசிஐ காத்துக் கொண்டிருந்தது.
இந்நிலையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் நியமத்துக்கு ராகுல் டிராவிட் தற்போது சரி என தெரிவித்துள்ளார்.
மேலும் விக்ரம் ரத்தோர், டி திலீப் மற்றும் பராஸ் மாம்ப்ரே ஆகியோர் இந்திய அணியில் தொடருவார்கள்.
இந்திய அணியுடன் கடந்த இரண்டு வருடங்கள் மறக்க முடியாதவை. நாங்கள் தோல்வியையும் வெற்றியையும் கண்டிருக்கிறோம். இந்த பயணம் முழுவதும், குழுவிற்குள் இருந்த ஆதரவும் தோழமையும் தனித்துவமானது. டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் அமைத்துள்ள கலாச்சாரத்தைப் பற்றி நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.
இந்த காலகட்டத்தில் என் மீது நம்பிக்கை வைத்ததற்காகவும், எனது பார்வையை ஆதரித்ததற்காகவும், ஆதரவை வழங்கியதற்காகவும் பிசிசிஐ மற்றும் அலுவலகப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். மேலும் எனது குடும்பத்தின் தியாகங்களையும் ஆதரவையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். உலகக் கோப்பைக்குப் பிறகு நாங்கள் புதிய சவால்களை சந்திக்கும் போது, சிறந்ததைத் தொடர நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.